நண்பனின் மனைவிக்கு காதல் வலை…வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி : புகார் கொடுத்த கணவர்..காவல் நிலையத்தில் நடந்த இறுதிச்சடங்கு!!
Author: Udayachandran RadhaKrishnan4 May 2022, 6:23 pm
தருமபுரி : தகாத உறவு வைத்துக்கொண்ட ஜோடி விஷம் அருந்திவிட்டு மகளிர் காவல்நிலையம் முன்பு மயங்கி விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்த சதீஸ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது 19) என்பவருக்கும் திருமணமாகி 11 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில் சதீஸ் அவரது மனைவி சங்கீதா இருவரும் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். அதே போல் பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னப்பபையன் (வயது 20) என்பவரும், திருப்பூரில் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சின்னபையனும், சதீஸ்சும் பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால், சதீஸ் சின்னபையனிடம் நட்புடன் பழகி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதில் சின்னபையனுக்கும் சதீஸ் மனைவி சங்கீதாவிற்கும் தவறான உறவு ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதனை அறிந்த சதீஸ் தகாத உறவை கைவிடுமாறு மனைவியிடம் கூறி உள்ளார்.
இதனை கேட்காதால் சொந்த ஊருக்கு சங்கீதாவை அழைத்து வந்துள்ளார். சொந்த ஊர் வந்த சங்கீதா 11 மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு சின்னபையனுடன் கடந்த மாதம் 3 தேதி ஊரைவிட்டு இருவரும் தலைமறைவானார்கள்.
இது குறித்து சதீஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சின்னபையன் மற்றும் சங்கீதா இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இன்று காவல்நிலையத்திற்கு வருமாறு கூறி உள்ளனர்.
இதனையடுத்து இன்று சின்னபையன் மற்றும் சங்கீதாவும் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றனர். அப்போது இருவரும் காவல்நிலையம் நுழைவு வாயிலில் திடிரென மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த பெண் காவலர்கள் உடனடியாக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னபையனும், சங்கீதாவும் உயிரிழந்தனர். இது குறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
கள்ளக்காதல் ஜோடி விஷம் அருந்திவிட்டு காவல்நிலையம் முன்பு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.