முகநூலில் இளம்பெண்ணுக்கு காதல் வலை : குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் பலாத்காரம்.. டான்ஸ் மாஸ்டர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2022, 6:30 pm

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமூக வலைதள செயலி மூலம், இளம்பெண்ணிடம் நட்பை ஏற்படுத்தி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் பலாத்காரம் செய்த நடன பள்ளி ஆசிரியரை போலீசார் கைது.

சென்னை மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வினோதா (வயது 28) என்ற இளம்பெண்ணுக்கு
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபு(வயது 32) என்ற நடனப்பள்ளி ஆசிரியருடன் சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி தனது சொகுசு காரில் வினோதாவை தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மயக்கம் தெளிந்து இதுகுறித்து கேட்டபோது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டு தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக பாதிக்கப்பட்ட வினோதா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் நடன ஆசிரியர் பிரபுவை கைது செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தம்பி பிரபுவின் நடனப் பள்ளியில் படித்த போது சமூகவலைத்தளம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காரணமாக குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சீரழித்ததும் பிரபுவின் தாய் அவருக்கு உதவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ