காதலுக்கு வந்த எதிர்ப்பு:தஞ்சமடைந்த காதல் ஜோடி: ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில் நடந்த திருமணம்….!!

Author: Sudha
14 August 2024, 10:12 am

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நாகலூரைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் நவீன் இவர், பிஎஸ்சி நர்சிங் படித்து விட்டு, சேலம் சீலநாய்க்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

அதே மருத்துவமனையில், சேலம் அரியானூரைச் சேர்ந்த முருகேசன் மகள் சபீதா (23) என்பவரும் பணி புரிந்து வந்தார்.
இருவரும் கடந்த ஓராண்டுகளுக்கு மேல் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து இருவரின் பெற்றோரும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து இருவர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு தருமபுரி மாவட்டம் அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.


இதனையடுத்து காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் கெய்க்வாட், இவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருவரின் வீட்டாரையும் சமாதான செய்து அனுப்பி வைத்தார்.

காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால் இருளப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் குமார், மற்றும் புதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் நவீனுக்கும்-சபீதாவுக்கும் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் கெய்க்வாட் தலைமையில் போலீசார் திருமணம் நடத்தி வைத்து அனுப்பி வைத்தனர்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!