தஞ்சை பெரிய கோவிலில் காதலர்களுக்கு அனுமதி மறுப்பு… தாலியுடன் நின்றிருந்த இந்து மக்கள் கட்சியினர்…பரபரப்பு சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
14 February 2024, 2:47 pm

தாலி கட்டும் போராட்டத்தால் காதலர்களுக்கு தஞ்சை பெரிய கோவிலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காதலர்களுக்கு அறிவுரை வழங்கி போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூ மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும், தங்களின் இணையுடன் சுற்றுலா தலங்கள், பூங்கா, திரையரங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் தாலி கட்டும் போராட்டம் நடத்த வந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இருந்த போதும் கோவில் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் காதலர்களுக்கு அறிவுரை கூறி கோவிலுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…