மனைவி மீது மண்ணென்ணை ஊற்றி தீ வைத்த காதல் கணவன் : வரதட்சணை கொடுமையால் கொடூரம்.. பெண் மரண வாக்குமூலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2022, 10:30 am

காதல் கணவன் தன்னை தீ வைத்து கொளுத்தியதாக, மரண வாக்குமூலம் அளித்த மனைவியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள வழுதாவூரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். 30 வயதான ஓட்டுநரான இவருக்கும் ஆசாரங்குப்பத்தைச் சேர்ந்த சங்கீதா (வயது 24), என்பவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
முத்துக்குமரனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால், கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்படும். கடந்த, 4ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு சங்கீதா மண்ணெண்ணெய் எடுத்து தானே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாக முதலில் மருத்துவரிடமும் காவல்துறையினரிடமும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சங்கீதா இறப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அதில் வரதட்சணை கேட்டு கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து சண்டை போடுவார் எனவும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பேன் எனக் கூறிய போது கணவர் என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு பின்னர் தண்ணீரில் தூக்கி வீசினார்.

உடல் முழுவதும் தோள்கள் கழன்று கதறிய போது அக்கம் பக்கத்தினர் மீட்டனர். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உண்மையை சொன்னால் உன்னை கொளுத்திய மாதிரி பிள்ளைகளையும் கொளுத்தி விடுவேன் என மிரட்டினார்.

அதனால் யாரிடமும் உண்மையை சொல்லவில்லை நீதிபதி போலீசார் டாக்டர் மற்றும் எங்கள் வீட்டில் உள்ளவர்களிடமும் பொய் தான் சொன்னேன். இதுதான் நடந்த உண்மை என சங்கீதா கூறியுள்ளார்.

சங்கீதாவின் தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டமங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 413

    0

    0