குறைந்த பாதிப்பு… குறையாத பலி எண்ணிக்கை : கோவையுடன் இணையும் சென்னை.. தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2022, 8:25 pm

சென்னை : தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 22,238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 26,624 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 22,238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 33,25,940 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை உயிரிழப்பின் எண்ணிக்கை 37,544 ஆக உள்ளது.

இதுபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 26,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 30,84,470 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,03,926 ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 3,998 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கோவையில் 2,865 பேருக்கும், செங்கல்பட்டில் 1,534 பேருக்கும், திருப்பூரில் 1,497 பேருக்கும், சேலத்தில் 1,181 பேருக்கும், ஈரோட்டில் 1,127 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!