இந்த ஆடியில தங்கம் எடுக்கலாமா? குறைந்தது விலை : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2022, 10:49 am

பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும். பெரும்பாலும் முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.
இதனால், தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.
இந்த நிலையில், 2வது நாளாக தங்கம் விலை இன்றும் சரிந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.38, 416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,802-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.63,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!