பெண்களை வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து மிரட்டும் லுலு கும்பல் : சிக்கும் முக்கியப்புள்ளி.. ஆதாரத்துடன் பிரான்ஸ் தமிழ்ச்சி புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2022, 5:42 pm

போராளிகள் என்று தங்களை காட்டிக்கொண்டு பின்புலத்தில் அவர்கள் ஈடுபடும் செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதி மதமின்றி REDICAL FEMINISM பேசும் ஆண்கள் சிலர், கணவன் மீது வெறுப்புள்ள பெண்கள், குடும்பத்தின் மீது அதிருப்தி உள்ள பெண்கள், பெண்கள் உரிமை, பெண்கள் சுதந்திரம் என பெண்ணுரிமைக்காக போராடும் பெண்களை குறிவைத்து அவர்களின் அனுமதியோடு படுக்கைகளை பகிர்ந்து அதை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம், லுலு குழுவின் பாலியல் சர்ச்சைதான். இதை கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்சிஸ் நாட்டில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் தமிழச்சி என்பவர் முகநூல் பக்கத்தில் வெளிச்சம் போட்டு காட்டினார்.

குறிப்பாக பெண்களை வலுக்கட்டாயமாக மூளைச்சலவை செய்யும் ஒரு பெண் கும்பல், வாட்ஸ் அப், முகநூலில் குரூப் உருவாக்கி அதில் சமூகத்தல் போராளிகள் என்றும் சொல்லிக் கொள்ளும் சில போலி போராளிகளை சேர வைத்து, பெண்களின் வாழ்க்கையில் நடந்த துன்பங்களை துயரங்களை கேட்டறிந்து பின்னர் அவர்களை சமாதானப்படுத்த படுக்கையறையை பயன்படுத்துகின்றனர்.

இதில் ஆண்கள் மட்டுமல்ல முழுக்க முழுக்க பெண்களால் மட்டும் மிகப்பெரிய ஆபத்து பெண்களுக்கே ஏற்பட்டுள்ளது. இந்த சமூக சீர்கேடு, மிக ஆபத்தான பாலியல் சுரண்டல்கள் நடப்பதாக தமிழச்சி குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்த குழுவில் உள்ள சிலருக்கு அரசியல் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பதாகவும் பெண்கள் ஏமாற்றப்பட்டு அவர்களே அறியாமல் நிர்வாணப் படங்கள், வீடியோக்கள் எடுக்க வைத்து பகிர வைத்து மிரட்டப்படுவதாகவும் தமிழச்சி தெரிவித்திருந்தார்.

அண்மையில் திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், நிர்வாணப்படங்களை காட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தமிழச்சி ஆதாரங்களுடன் புகார் கூறியிருந்தார்.

தற்போது பெரியாரிஸ்ட் என தன்னை காட்டிக்கொள்ளும் பெரியார் சரவணன் குறித்து தமிழச்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு பெண்ணை 4 ஆண்கள், 3 நாட்களாக வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, பிறகு அவரின் நிர்வாணப் படங்களை எடுத்து பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Image

மேலும் அந்த ட்விட்டர் பதிவில், பெண்ணை வன்கொடுமை செய்யப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்து ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த ட்விட்டர் பதிவை முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் சூழலில், போராளிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பெண்களை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டும் கும்பலை பிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…