திருப்பூர் அருகே சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து : ஓட்டுநர் பரிதாப பலி, 2 வயது குழந்தை உட்பட 7 பேர் படுகாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2022, 8:48 pm

திருப்பூர் : பல்லடம் அருகே 2 சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியான நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை சின்னியம்பாளையம் பகுதியிலிருந்து பல்லடத்திற்கு மணவரை அலங்கார வேலை பார்க்கும் டேவிட்ராஜ், வெள்ளிமலை, சுரேஷ், ஓட்டுநர் மூர்த்தி ஆகியோர் காரில் இன்று மாலை வந்தனர்.

இந்நிலையில் உடுமலையிலிருந்து கோவை நோக்கி சொகுசு காரில் உடுமலையை சேர்ந்த மணி (வயது 55) மற்றும் அவரது மனைவி மீனாட்சி (வயது 51) மற்றும் அவரது மகள் கிருத்திகா மற்றும் கிருத்திகாவின் 2 வயது குழந்தை மகிழன் சென்றனர்.
இரண்டு கார்களும் பல்லடம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரும்பாளி பகுதியில் நேருக்குநேர் நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூர்த்தி என்ற ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அனைவரையும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Enai Noki Paayum Thota controversy தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!