அப்டேட் இல்லாத ஆளு அவரு .. மா.சு. சூசகம்

Author: Hariharasudhan
7 November 2024, 12:58 pm

மருத்துவர் காலிப் பணியிடங்கள் குற்றச்சாட்டில் சீமான் அப்டேட் இல்லாமல் இருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடலூர்: கடலூரில் இன்று (நவ.7) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைகளில் ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அரசு மருத்துவமனைகள் குறித்தான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன்பு தான் 20க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் டீன்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர் எனக் கூறினார். தற்போது, டீன்கள் பணி நியமனம் பற்றி சீமான் அப்டேட் இல்லாமல் இருந்து வருகிறார். அரசியல் கட்சி சார்ந்தவர் இப்படி அப்டேட் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது” என்றார்.

SEEMAN ANGRY

முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தேர்வு வாரியத்தால் நான்கு முறை மருத்துவர்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும், கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்தத் தேர்வுகள் நடைபெறவில்லை. 2021ஆம் ஆண்டுத் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் அதே அவலநிலையே தொடர்ந்து வருகிறது என சீமான் குற்றம் சாட்டி இருந்தார்.

இதையும் படிங்க: பச்சை துரோகி… என் எதிரிக்கு கைக்கூலி : பிரபல நடிகரை விளாசிய இயக்குநர்!

அது மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரத்து 553 மருத்துவர் பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று அறிவித்து ஓராண்டு முடிவடையும் நிலையில், இன்று வரை ஒரு மருத்துவர்கள் கூட நியமனம் செய்யப்படவில்லை என்றும், தற்போது மருத்துவ காலிப் பணியிடங்கள் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்றும் சீமான் தெரிவித்திருந்தார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 177

    0

    0