ஓபிஎஸ்க்கு புது நெருக்கடி.. இனி மதுரை கோர்ட்டில் வாதம்.. ஐகோர்ட் உத்தரவு!

Author: Hariharasudhan
29 October 2024, 6:28 pm

ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை செய்ய மதுரை எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து 2012ஆம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து, சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓபிஎஸ்சின் மனைவி விஜயலட்சுமி உள்ளிட்ட இரண்டு பேர் இறந்துவிட்டதால், அவர்களுக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அறிவித்த நீதிபதி, வழக்கை மதுரை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

மேலும், நவம்பர் 27ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என சிவகங்கை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, ஆவணங்களைப் பெற்ற பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும் எனவும் கூறினார். இதற்காக நேரில் ஆஜராகும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பிணை பத்திரத்தைப் பெற்று ஜாமீன் வழங்கலாம் என மதுரை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை இழுத்தடிக்க முயற்சித்தால் சம்பந்தப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல் விசாரணை அறிக்கையை துணை அறிக்கையாக எடுத்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும், தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி, 2025 ஜூன் 31ஆம் தேதிக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றும், பின்னர் இவ்வழக்கின் நிலை குறித்து உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் மதுரை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, கடந்த 2001 முதல் 2006ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஒ.பன்னீர்செல்வம். இவர் அப்போது வருமானத்துக்கு அதிகமாக 1.77 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதன் அடிப்படையில், ஓபிஎஸ், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றி, 2012ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

இதையும் படிங்க : இனி விமர்சனம் அதிகமாகும்.. விஜய் கடிதம்

இந்நிலையில், மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர அளித்த அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, வழக்கை திரும்பப் பெற அனுமதி அளிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 162

    0

    0