FIR வெளியானது எப்படி? கடிந்த ஐகோர்ட்.. பல்கலைக்கு பறந்த உத்தரவு!
Author: Hariharasudhan28 December 2024, 2:28 pm
பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை எஃப்ஐஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இதனையடுத்து, தமிழக அரசை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், இன்று தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அம்மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், “பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை எஃப்ஐஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. முதல் தகவல் அறிக்கையில் உள்ள வார்த்தைகளும் கண்ணியத்துடனே இருக்க வேண்டும். FIR-ல் மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. FIR வெளியாவது புகார் அளித்தவரின் சுதந்திரத்தைப் பறிக்கும்.
இதையும் படிங்க: ஆன்லைனில் வாங்கிய கடன்.. தவணை செலுத்தாத பெண்ணை மார்பிங் செய்து மிரட்டிய இருவர் கைது!
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த மாணவி படிப்பைத் தொடர அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அவரிடம் எந்த தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. புாதிக்கப்பட்ட மாணவி தொடர்ந்து படிப்பை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை டிஜிபி அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.