அசந்த நேரத்தில் ரூ.2.20 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பல் : பள்ளியில் குழந்தையை அழைத்து வரச் சென்ற போது அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
7 January 2023, 10:02 pm

பள்ளிக்கு குழந்தை அழைத்து வர வந்த தந்தையின் இருசக்கர வாகனத்தில் இருந்து 2.20 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூரில் அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள ஜாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில், மேலவளவை சேர்ந்த ராமு என்பவர், அங்கு பயலும் தனது குழந்தையை ஏற்றுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்பொழுது வரும் வழியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்மில் இருந்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, குழந்தையை ஏற்ற வந்த அவர், இருசக்கர வாகனத்தை பள்ளியின் முன் நிறுத்திவிட்டு குழந்தை அழைப்பதற்காக சென்றுள்ளார்.

அந்த சமயம் அவரைப் பின் தொடர்ந்து வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் அவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில், மேலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 468

    0

    0