மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் நாகராஜன் திடீர் மரணம் : மாராடைப்பால் மருத்துவமனையில் உயிரிழப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan13 January 2023, 9:31 am
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரான நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவால் நாகராஜன் சென்னை ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு 12:15 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மூத்த நரம்பியல் நிபுணரான நாகராஜன், வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக இருந்தவர். மதுரை புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜனை கடந்த 2022-ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.
இவர் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.