இயந்திர கோளாறு காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் உரிய விளக்கம் அளிக்காததால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையத்திலிருந்து 39 பயணிகளுடன் நேற்று மதியம் 12:05க்கு கிளம்ப வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால், விமானம் ரத்து செய்யப்பட்டதாக எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.
உணவு மற்றும் பயணிகள் தங்குவதற்கான எந்த ஒரு ஏற்பாடுகளும் ஸ்பைஸ் நிறுவனம் செய்யவில்லை என்று பயணிகள் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பின்னர், மாற்று விமானம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாற்று விமானம் ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி மதுரை விமான நிலையத்திற்கு 5 மணிக்கு வந்தடையும் என்று ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதில் கோபமடைந்த பயணிகள் 19க்கும் மேற்பட்டோர் விமான பயணத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பி விட்டனர். மீதமுள்ள 20 பேர் மட்டும் ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள மாற்று விமானம் மூலம் மாலை ஐந்து மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை சென்றனர்.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பயணிகளுக்கான மதிய உணவை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் இயந்திர கோளாறினால் அடிக்கடி ரத்து செய்யப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.