மதுரையில் அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து… குழந்தை உள்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
Author: Babu Lakshmanan3 January 2024, 2:09 pm
மதுரை – முத்துப்பட்டி அங்கன்வாடி மையத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தை மற்றும் சமையலர் முனியம்மாள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி அருகே உள்ள வீரகாளி அம்மன் கோவில் தெருவில் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் பொருள் தனி அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த முத்துப்பட்டி அங்கன்வாடியில் ஆசிரியர்கள் இன்று வராததால், அங்கு உணவு தயாரிக்கும் முனியம்மாள், பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு உணவுப் பொருட்களை வைக்கப்பட்டுள்ள அறைகள் அழைத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், உணவு பொருள்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கான்கிரீட் மேல் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் சமையல் பெண் முனியம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே போல், இரண்டு வயதான கவனிக்கா ஸ்ரீ குழந்தை கையில் விழுந்து காயத்துடன் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.