அதெப்டி நீங்க சொல்லலாம்? கஸ்தூரி மீது நீதிபதி காட்டம்.. காரசார வாதம்!

Author: Hariharasudhan
12 November 2024, 6:46 pm

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், முன் ஜாமீன் கோரிய கஸ்தூரியின் மனு மீது நாளை மறுநாள் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

மதுரை: கடந்த நவம்பர் 3ஆம் தேதி, பிராமணர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தெலுங்கு நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.

அதில், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. கஸ்தூரியின் இந்தப் பேச்சுக்கு எதிராக பல தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கஸ்தூரியின் இந்த பேச்சு குறித்து சென்னை, மதுரை மற்றும் திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்தனர்.

மேலும், இது தொடர்பாக எழும்பூர் போலீசார், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பேசுவத, சாதி, மதம், இனம் குறித்து இரு பிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துவது, அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்த ஒரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல் மற்றும் அவதூறு பரப்புவது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

எனவே, இது தொடர்பாக போலீசார் கஸ்தூரிக்கு சம்மன் அளிக்கச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே, தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நடிகை கஸ்தூரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கஸ்தூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்ட பின்னரும், மன்னிப்பு கேட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பின்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என முறையிட்டார்.

MHC MADURAI BENCH

இதனையடுத்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன், “மனுதாரருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு இடையே பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில் அவர் திட்டமிட்டு பேசி உள்ளார். தெலுங்கு பேசும் நட்பு மாநில திருப்பதி கோயிலுக்கு 40 சதவீதம் தமிழ் பக்தர்கள் சென்று வரும் நிலையில், மனுதாரரின் இவ்வாறான பேச்சு சரியானது அல்ல.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் சிந்தனை என்பது ஒன்றே. இது போன்ற சம்பவங்களை இப்படியே விட்டு விட்டால், அது பிறரை ஊக்குவிப்பதைப் போல் ஆகிவிடும். எனவே, மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது” என எதிர்ப்பு தெரிவித்து வாதங்களைப் பதிவு செய்தார்.

இதையும் படிங்க: என்ன யோக்கியதை இருக்கு.. சீமானை மீண்டும் வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி!

இதனைத் தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது, அவர்கள் தமிழ்நாட்டின் ஒரு பகுதி. சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள் தான், அவர்களை எப்படி பிரித்துப் பேச முடியும் சமூக ஆர்வலர் எனக் கூறும் கஸ்தூரி, இப்படி வெறுப்பு பேச்சை பேசியது ஏன்?

தனது செயலுக்கு கஸ்தூரி ஒரு இடத்தில் கூட மன்னிப்பு கேட்கவில்லையே, ஏன்? மாறாக கஸ்தூரி, தான் பேசியதை நியாயப்படுத்துவது போல் உள்ளது. குறிப்பிட்ட சமூக பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் எனக் குறிப்பிட்டு ஏன் கூறினார்? அவர் எப்படி கூறலாம்? அதற்கான அவசியம் என்ன?” என காட்டமான கருத்துகள் மற்றும் கேள்விகளைத் தொடுத்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வருகிற நவம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 119

    0

    0

    Leave a Reply