தமிழகம்

மனைவி சுயஇன்பம் செய்கிறார்.. கணவரின் மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கூறியுள்ளது.

மதுரை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மனைவியின் தொல்லையால் தனித்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தன்னுடைய மனைவியிடமிருந்து விவாகரத்தும் கோரியிருக்கிறார். ஆனால், இவருக்கு குடும்ப நீதிமன்றம் விவாகரத்து அளிக்கவில்லை. எனவே, இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், “என் மனைவி ஆபாசப் படங்கள் பார்ப்பதற்கு அடிமையானவர். வீட்டு வேலைகளைச் செய்ய மறுத்தவர். அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபட்டவர். அவர் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்” எனத் தன்னுடைய மனுவில் கோரி விவாகரத்து கேட்டுள்ளார்.

இருப்பினும், அவர் தன்னுடைய மனைவி பாலியல் ரீதியாக பரவும் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை உறுதிப்படுத்தும் எந்த ஆவணங்களையும் கணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ஆர்.பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, “ஒரு மனைவி ஆபாசப் படங்களைப் பார்ப்பதில் எந்த சட்டப்பூர்வச் சட்டங்களையும் மீறவில்லை என்றால், அந்தப் பழக்கம் ஒருவரின் தாம்பத்தியக் கடமைகளை நிறைவேற்றுவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றால், அத்தகைய செயல்கள் கொடுமைக்கு சமமாக இருக்க முடியாது.

எனவே, விவாகரத்துக்கான காரணமாக இருக்க முடியாது. தனிப்பட்ட முறையில் ஆபாசப் படங்களை பார்ப்பதும் குற்றமல்ல. ஆண்கள் மத்தியில் சுயஇன்பம் என்பது உலகளாவியது என்று ஒப்புக்கொள்ளப்பட்டபோது, பெண்கள் சுயஇன்பம் செய்வதை களங்கப்படுத்த முடியாது.

இதையும் படிங்க: தாம்பரத்தில் கொலை.. செஞ்சியில் உடல் புதைப்பு.. Ex MP உதவியாளர் கொடூர கொலையின் பின்னணி என்ன?

இது ஒரு பெண்ணின் பாலியல் சுயாட்சியையும், தனியுரிமைக்கான அடிப்படை உரிமையில், வாழ்க்கைத் துணையின் தனியுரிமையும் அடங்கும். மேலும், ஒரு பெண் திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கு காரணமாகிவிடும்.

இருந்தாலும் சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது. கற்பனையில் கூட, அது கணவருக்கு கொடுமையை ஏற்படுத்தும் என்றெல்லாம் சொல்ல முடியாது” எனக் கூறி விவாகரத்து கோரிய கணவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

9 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

10 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

10 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

11 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

12 hours ago

This website uses cookies.