‘அக்கினி குஞ்சொன்று கண்டேன்’… பாரதியார் பாடலை வைத்து திமுகவை விமர்சித்து பாஜக கவுன்சிலர்கள் ஒட்டிய போஸ்டர் வைரல்..!!

Author: Babu Lakshmanan
17 June 2023, 10:32 am

மதுரையில் பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி திமுகவினருக்கு எதிராக பாஜக மாமன்ற உறுப்பினர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

மதுரை மாநகர் பகுதியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சார்பி சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டு உள்ளது. அதில், பாரதியார் கவிதை “அக்கினி குஞ்சொன்று கண்டேன்” என ஆளுநர் ரவியையும், அதை அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்! (தமிழகம்) வெந்து தனிந்தது காடு( திராவிடம்) தழல் வீரத்தில் குஞ்சென்று முன்பென்றும் உண்டோ? தத்தரிகெட தத்தரிகிடதித்தோம் என குறிப்பிட்டுள்ளது.

ஒரு பக்கம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி புகைப்படமும், மற்றொரு பக்கம் பிரதமர் மோடி, அண்ணாமலை புகைப்படத்தை வைத்துள்ளனர். இந்த போஸ்டர் அனைவரின் கவனம் பெற்று வருகிறது.

  • getti melam serial actor Passed away தூக்கத்திலேயே உயிர் பிரிந்த நடிகர்.. திரையுலகம் அதிர்ச்சி..!!