எம்பி பதவி உனக்கு ஒரு கேடா? வாக்களித்தவர்களுக்கு வாய்க்கரிசியா?? மதுரை எம்பிக்கு எதிராக பாஜக ஒட்டிய போஸ்டர் வைரல்!!

Author: Babu Lakshmanan
26 December 2023, 3:53 pm

மதுரை நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பாஜக மீனவர் பிரிவு சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரையின் முக்கிய பகுதிகளில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசனுக்கு எதிராக மதுரை மாநகர் மாவட்ட பாஜக மீனவர் பிரிவு சார்பாக மதுரை நகர் பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைப்பதற்கு பணம் கொடுத்தது உண்மைதான் என்று முதல்வர் கூறியது பொய்யா??

சமூக நீதிப் போர்வையில் ஒளிந்திருக்கும் தொடர் போலி பிரச்சாரம் செய்யும் சு வெங்கடேசன் (சுருட்டல்) MP-யே, மதுரை மக்களுக்கு பாராளுமன்றத்தில் உன் குரல் என்ன?. மதுரை மக்கள் மன்றத்தில் உன் நலத்திட்டங்கள் எங்கே ?? எம்பி பதவி உனக்கு ஒரு கேடா? வாக்களித்தவர்களுக்கு வாய்க்கரிசியா??, போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக் குமார் சார்பில் மதுரை முக்கிய பகுதிகளில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே பாஜக சார்பில் மதுரை முழுவதும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu