‘ஓரளவுக்கு மேல் நம்ம கிட்ட பேச்சே கிடையாது, வீச்சுதான்’ ; ஜெய்லர் வசனத்துடன் மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்கள்..!!!

Author: Babu Lakshmanan
19 September 2023, 2:15 pm

பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்த நிலையில், மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது.

பாஜகவின் மாநில தலைவர் பொறுப்பு ஏற்றது முதல் திமுகவை எதிர்த்து வரும் அண்ணாமலை, அவ்வப்போது கூட்டணி கட்சியான அதிமுகவையும் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில், அண்மையில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இப்படியிருக்கையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அதிமுகவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வருகின்றனர். அதேவேளையில், பாஜகவினரும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்த நிலையில், மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது.

மதுரை முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்கள் ஒட்டிய அந்தப் போஸ்டரில், அண்ணாமலை புகைப்படத்துடன் ‘ஓரளவுக்கு மேல் நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சுதான்’, என்ற ஜெய்லர் பட வசனம் இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம், அதிமுக – பாஜக கூட்டணி பிளவு மேலும் அதிகரித்துள்ளது.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 418

    0

    0