மதுரை புத்தக திருவிழாவில் நகைச்சுவை பிரபலம் ராமர் பெயர்.. முதலில் அழைப்பு? இப்போது மறுப்பு?

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2024, 4:55 pm

மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பபாசி ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் கடந்த 6ம் தேதி தொடங்கியது.

11நாட்கள் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தலைப்புகளில் பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விழாவில் வெ.இறையன்பு, சு.வெங்கடேசன், மதுக்கூர் இராமலிங்கம், இந்திரா சௌந்தரராஜன், கு.ஞானசம்பந்தன், ஐ.லியோனி, மனுஷ்ய புத்திரன், நந்தலாலா, பர்வீன் சுல்தானா, பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

இந்நிலையில் 14ம் தேதி மாலை நேர நிகழ்வாக பேச்சாளர் பர்வின் சுல்தானா அவரைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நகைக்சுவை நடிகர் ராமர் கலந்து கொள்வதாக அழைப்பிதழில் பெயர் மற்றும் வரவேற்பு பேனர்கள் புத்தகத்திருவிழாவில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் விருந்தினர் அழைப்பில் சர்ச்சை ஏற்பட்டு நகைச்சுவை நடிகர் ராமர் கலந்து கொள்வது குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில், புத்தகத்திருவிழாவில் வைக்கப்பட்ட வரவேற்பு பேனரில் ராமர் படம் மறைக்கப்பட்டும், அவரது பெயர் மறைக்கப்பட்டுள்ளது.

Comedian Rama at Book Festival

இதன்மூலம் நகைச்சுவை நடிகர் ராமர் புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?