கட்டுமானப் பணியின் போது இடிந்து விழுந்த படிக்கட்டு சுவர்.. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி… 3 பேர் படுகாயம்..!!
Author: Babu Lakshmanan1 July 2023, 12:59 pm
மதுரை – விளாங்குடி அருகே நிகழ்ந்த கட்டிட விபத்தில் இடிப்பாடுகளுக்குள் சிக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி விளாங்குடிக்கு உட்பட்ட சொக்கநாதபுரம் 1வது தெருவில் அன்பழகன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புது வீடு ஒன்று கட்டுமான பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் வீட்டு பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில், புது கட்டிடத்தின் படிக்கட்டின் மற்றும் பின்பக்க சுவரின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில், இடிபாட்டுக்குள் பணியாளர்கள் நான்கு பேர் சிக்கிக்கொண்டனர்.
அதில், ஒரு மூதாட்டி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தார். மற்ற மூவரையும் பகுதியைச் சார்ந்த மக்களும், தீயணைப்பு துறை வீரர்களும், இடிபாடு குழு இருந்து மாட்டிக்கொண்ட மூன்று பேரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.