மதுரையை உலுக்கும் மர்ம கும்பல்… ஜல்லிக்கட்டு காளைகள் அடுத்தடுத்து கடத்தல் ; அலட்சியம் காட்டுகிறதா போலீஸ்…? பீதியில் மாடு வளர்ப்போர்..!!

Author: Babu Lakshmanan
16 January 2023, 11:48 am

மதுரை : மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளை அடுத்தடுத்து கடத்தி வரும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது கடந்த ஏழாம் தேதி மதுரை தெற்கு மாசி வீதி பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை 10 பேர் கொண்ட கும்பல் திருடி சென்றனர். இதனை தொடர்ந்து உரிமையாளர்கள் பலமுறை காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாட்டு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

இதே போல் நேற்று முன்தினம் அதிகாலை சிக்கந்தர் சாவடியில் இருந்து மாட்டை திருடி வருவதாக கூடல் புதூர் சோதனை சாவடி நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து, சோதனை சாவடியில் இருந்த தவமணி என்பவர் வாகனத்தை மறைத்த போது, மாடு திருடர்கள் வாகனத்தை நிறுத்தாமல் காவல்துறையினர் காலின் மீது ஏற்றி சென்றனர். இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

தத்தனேரி, அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் பல மாடுகளை திருடிச் சென்றுள்ளனர். பல இடங்களில் சிசிடிவி காட்சிகள் இருந்தும் காவல்துறையினர் அலட்சியமாக இருப்பதால் தொடர் மாடுகள் திருடப்பட்டு வருகிறது. இதே போல், தெற்கு மாசி வீதியில் சுற்றித்திரிந்த மாட்டினை புடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி, மாடு வளப்போர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாடு திருடர்களை எப்போது காவல்துறையினர் பிடிப்பார்கள் என்று மாட்டின் உரிமையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • Mookuthi Amman 2 latest shooting update அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!