காரை ஓட்டிச் சென்றவர் திடீரென மாரடைப்பில் மரணம்… தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் பைக்கில் சென்ற தம்பதிக்கு நேர்ந்த துயரம்..!!

Author: Babu Lakshmanan
8 July 2022, 10:48 am

மதுரையில் கார் ஓட்டியபோது மாரடைப்பு ஏற்பட்டதில் அடுத்தடுத்த வாகனங்களில் மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கூடல்நகர் அப்பாத்துரை நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான செந்தில்குமார் (47) என்பவர், தனது காரில் சிக்கந்தர்சாவடி பகுதியிலிருந்து செல்லூர் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கூடல்நகர் மேம்பாலத்தின் நடுவே வந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனால், கார் தானாக கட்டுப்பாட்டை இழந்து ஓட தொடங்கியதில், முன்னால் சென்ற அடுத்தடுத்த இரு சக்கர வாகனங்களின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மதுரை ஆனையூர், TNHB காலனி பகுதியை சேர்ந்த சங்கர் மற்றும் அவரது மனைவி நாகலெட்சுமி ஆகியோர் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியது.

நாகலெட்சுமி உடனே கீழே விழுந்து காயம் ஏற்பட்ட நிலையில், பைக்கை ஓட்டிவந்த சங்கரை கார் தரதரவென பாலத்தின் சுவரோடு உரசியபடி நீண்டதூரம் இழுத்துசென்றதில், படுகாயமடைந்து சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்த நிலையில். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரை ஓட்டி வந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தால், அடுத்தடுத்து விபத்து நிகழ்ந்து ஒருவர் பலியான சம்பவத்திற்கு யாரை குறை சொல்ல முடியும்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 942

    0

    0