கஞ்சா பீடி கேட்டு கைதிகளுக்கு இடையே மோதல்… மதுரை மத்திய சிறையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
8 October 2022, 10:29 am

மதுரை ; மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே பீடி கேட்டு மோதல் ஏற்பட்ட சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய சிறையில் 1200க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர்.

நேற்று மாலை தண்டனை கைதியான வெள்ளைக்காளி கூட்டாளியை சேர்ந்த ஒரு தரப்பினரும், கச்சநத்தம் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே கஞ்சா பீடி கேட்டு வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில், இரு தரப்பை சேர்ந்த 3 பேருக்கு நகக்கீரல்களுடனான காயம் ஏற்பட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இரு தரப்பினர் இடையே ஏற்பட்டதால் சிறை வளாகம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Two years Bond with Raashi khanna Says Popular Actor 2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!