மதுரை மாமன்ற கூட்டத்தில் திமுக உட்கட்சி பூசல்… மாநகராட்சி அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ; போலீசார் குவிப்பால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
3 April 2023, 11:45 am

மதுரை மாமன்ற கூட்டத்தில் திமுக உட்கட்சி பூசல் எதிரொலியாக மாநகராட்சி அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு காவல்துறையினர் குவிப்பால் பரபரப்பு நிலவி வருகிறது.

மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக வந்த தகவலையடுத்து, மதுரை மாநகராட்சி பகுதியில் காவல்துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கூட்டத்திற்கு வரக்கூடிய மாமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் பலத்த சோதனைக்கு பின்பாகவே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாமன்ற உறுப்பினர்களின் செல்போன்கள் வாங்கி வைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.

மாநகராட்சி முழுவதிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான நிலை காணப்படுகிறது. மாநகராட்சி மேயர் இந்திராணி நிதியமைச்சரின் ஆதரவாளர் என்பதால், மாவட்ட செயலாளர் கோ தளபதி மற்றும் அமைச்சர் பி.மூர்த்தியின் ஆதரவாளர்கள் தங்களது பகுதிகளுக்கு எந்தப் பணிகளையும் மேயர் மேற்கொள்ளவில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!