செய்தியாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல் : மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தின் போது அராஜகம்..!!

Author: Babu Lakshmanan
11 May 2022, 4:57 pm

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் பற்றிய செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாநகராட்சிக்கான பட்ஜெட் கூட்ட தொடர் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. மேயர் , ஆணையாளர் வருகை தராத நிலையில், இருக்கை ஒதுக்கீடு திமுக – அதிமுக உறுப்பினர்களுக்கான மாமன்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து தங்களுக்கான இருக்கை தொடர்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரை சந்தித்து முறையிடுவதற்காக மேயர் அறைக்கு சென்றனர். அப்போது அதனை செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்கள் மீது மேயர் அறை முன்பாக இருந்த திமுகவை சேர்ந்தவர்கள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தி கேமிராவை காலால் எட்டி உதைத்து உடைத்தனர்.

இதனையடுத்து, திமுகவினரின் அராஜக போக்கை கண்டித்து செய்தியாளர்கள் மேயர் அறை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சி மேயர் அறையானது தொடர்பே இல்லாமல், ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மேலும் திமுக பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர், உறவினர்கள் முழுவதிலுமாக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் அனைத்துகட்சி மாமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1054

    0

    0