நாளுக்கு நாள் தீவிரமடையும் டெங்கு… சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் ; மதுரை மாநகராட்சி அதிரடி..!

Author: Babu Lakshmanan
19 September 2023, 6:08 pm

மதுரையில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஏடிஎஸ் கொசு உருவாக்கும் சூழலை உண்டாக்கியதாக சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 70 க்கும் மேற்பட்டோருக்கு பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், 39 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் மதுரை மாநகராட்சி மற்றும் 3 மாவட்ட பகுதிகளில் குழந்தைகள், 4 சிறுவர்கள் என 15 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இன்று வரை மதுரை மாவட்டத்தில் 6 குழந்தைகள் 9 சிறுவர்கள உட்பட 36 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மழை காரணமாக ஆங்காங்கே அரசு மற்றும் வணிக கட்டிடங்களில் மழை நீர் தேங்குவதாலும், மாநகராட்சி பகுதிகளில் நீண்ட நாட்களாக அள்ளாத குப்பைகளில் மழைநீர் தேங்கி அதன் மூலமாக டெங்கு கொசுக்கள் அதிகளவிற்கு உற்பத்தியாகி பொதுமக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இன்று மதுரை மாநகராட்சி 72ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாநகர் நகர் அலுவலர் வினோத்குமார் தலைமையில் டெங்கு தடுப்பு பணிஆய்வு நடைபெற்றது.

அப்போது, டெங்கு தடுப்புக்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும் தேவையற்ற பழைய பொருட்களை சுகாதாரமற்ற முறையில் தேக்கி வைத்திருந்த காரணத்தினாலும், (டயர்கள், பழைய ட்ரம்கள்) மேலும் டெங்கு கொசு புழு உற்பத்தி கண்டறியப்பட்ட காரணத்தினாலும், சரவண செல்வரத்தினம் மற்றும் தேவேந்திரன் ஒர்க்‌ஷாப் ஆகிய நிறுவனங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இது போன்று தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் இருப்பது கண்டறியப்பட்டால் மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 312

    0

    0