மதுரையில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஏடிஎஸ் கொசு உருவாக்கும் சூழலை உண்டாக்கியதாக சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 70 க்கும் மேற்பட்டோருக்கு பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், 39 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மதுரை மாநகராட்சி மற்றும் 3 மாவட்ட பகுதிகளில் குழந்தைகள், 4 சிறுவர்கள் என 15 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இன்று வரை மதுரை மாவட்டத்தில் 6 குழந்தைகள் 9 சிறுவர்கள உட்பட 36 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மழை காரணமாக ஆங்காங்கே அரசு மற்றும் வணிக கட்டிடங்களில் மழை நீர் தேங்குவதாலும், மாநகராட்சி பகுதிகளில் நீண்ட நாட்களாக அள்ளாத குப்பைகளில் மழைநீர் தேங்கி அதன் மூலமாக டெங்கு கொசுக்கள் அதிகளவிற்கு உற்பத்தியாகி பொதுமக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இன்று மதுரை மாநகராட்சி 72ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாநகர் நகர் அலுவலர் வினோத்குமார் தலைமையில் டெங்கு தடுப்பு பணிஆய்வு நடைபெற்றது.
அப்போது, டெங்கு தடுப்புக்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும் தேவையற்ற பழைய பொருட்களை சுகாதாரமற்ற முறையில் தேக்கி வைத்திருந்த காரணத்தினாலும், (டயர்கள், பழைய ட்ரம்கள்) மேலும் டெங்கு கொசு புழு உற்பத்தி கண்டறியப்பட்ட காரணத்தினாலும், சரவண செல்வரத்தினம் மற்றும் தேவேந்திரன் ஒர்க்ஷாப் ஆகிய நிறுவனங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இது போன்று தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் இருப்பது கண்டறியப்பட்டால் மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுவதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.