மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினா்களுக்கான மாதாந்திரக் கூட்டம் இன்று காலை 10:30 மணியில் இருந்து நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மேயா் இந்திராணி தலைமையில் நடைபெற்ற இந்த மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் தினேஷ்குமாா், துணை மேயா் நாகராஜன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறக்கூடிய இந்த மாமன்ற கூட்டத்தில் தங்கள் வார்டு பகுதியில் உள்ள குறைகளையும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அந்த வார்டு மாமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தின் வாயிலாக மதுரை மாநகராட்சி மேயர் இடம் தெரிவிப்பார்கள்.
மதுரை மாநகராட்சி பொருத்தவரை 100 வார்டு பகுதிகள் உள்ளன. இந்த 100 வார்டு பகுதிகளும் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலத்திற்கு ஒரு தலைவர் என்றும் உள்ளனர். பெரும்பான்மையாக 67 திமுகவினர், 12 கூட்டணிக் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் என 79 கவுன்சிலர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இன்று நடைபெற்று வரும் இந்த மாமன்ற கூட்டத்திற்கு 14, 15 மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தளபதி தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு திமுக கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளதால் இன்று நடைபெறக்கூடிய மதுரை மாநகராட்சி மாவட்ட கூட்டத்திற்கு அவர்கள் வரவில்லை என்பது தெரிய வருகிறது.
ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் மக்களின் அடிப்படைத் தேவைகள் இருக்கும் பட்சத்தில், அந்தக் தேவைகள் குறித்து திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் வராதது ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் உள்ள பொதுமக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த கூட்டத்தில், மதுரை மாநகராட்சி மேயா் இந்திராணி பேசும்போது,
மழைக்காலம் வருவதால் ஓர் வார்டு பகுதிகளிலும் உள்ள எச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்றும், அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு அதற்கான உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது என்றும், ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கவுன்சிலர்கள் தெரிவிக்கும்படி கூறினார்.
ஆனால், காலியாக உள்ள இருக்கையை கண்டு அவரது முகம் சுருங்கி போனது, எப்போதும் கூச்சல் சத்தத்துடன் வெளிநடப்பு செய்யும் அதிமுக கவுன்சிலர்களுக்கோ, காலியாக உள்ள இருக்கையை கண்டு, அதை கூட செய்ய விருப்பம் இல்லாமல் உள்ளேயே சத்தம் இல்லாமல் அமர்ந்திருந்தனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.