துணை முதலமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதியின் நண்பர்களுக்காக மாவட்ட ஆட்சியரின் இருக்கை மாற்றப்பட்டதாக வெளியான வீடியோவுக்கு ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை: உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதனை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டு, ஜல்லிக்கட்டு வீரர்கள் களத்துக்கு வந்தனர்.
தொடர்ந்து, பாரம்பரிய வழக்கப்படி கோயில் காளைகளுக்கு மரியாதை அளிக்கப்பட்ட பின்பு, ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன. மேலும், இந்த நிகழ்வில் திமுக அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர்.
இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டியின் போது இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையில் இருந்து மாவட்ட ஆட்சியர் எழுந்து நின்றதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இந்தச் சம்பவம் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் இடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், “துணை முதலமைச்சர் இருக்கையில் இருந்து எழுந்து நிற்கும்போது, விதிகளின் படியே மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நானும் எழுந்து நின்றேன். மாறாக, சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவம் திரித்துச் சொல்லப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினி,விஜயை தொடர்ந்து ரீ-ரிலீஸில் குதிக்கும் பிரபல நடிகர்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 – 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம். முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.