அன்று ஜிஎஸ்டி அதிகாரி… இன்று போலீஸ் அதிகாரி… நடந்து சென்றவரிடம் 1.5 லட்சம் வழிப்பறி டிப்டாப் நடிகர் கைது..!!
Author: Babu Lakshmanan10 May 2024, 9:21 am
மதுரையில் போலீஸ் எனக் கூறி 1.5 லட்சம் வழிப்பறி செய்த டிப்டாப் நாடக நடிகரை காவல்துறை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அன்ன அக்ராஹாரம் பகுதியில் உள்ள தனியார் (A.B.இன்டஸ்ட்ரிஸ்) நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் முருகன் என்பவர் தான் பணி புரியும் நிறுவனத்தின் சார்பில் சென்னை, திருச்சியில் பணம் வசூல் செய்துவிட்டு மதுரையில் பண வசூல் செய்வதற்காக வந்துள்ளார்.
மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!
பண வசூல் செய்வதற்காக கையில் பணப்பையுடன் மதுரை மேலமாசி வீதி கோபாலன் கொத்தன் தெரு பகுதியில் முருகன் நடந்துசென்றபோது, அந்த வழியாக வந்த டிப்டாப் நபர் ஒருவர் திடிரென முருகனை வழிமறித்து, ‘நான் காவல்துறை அதிகாரி என கூறியதோடு, கையில் பையில் என்ன உள்ளது என கூறி அடித்துள்ளார்.
இதையடுத்து, பதற்றத்தில் முருகன் தன்னிடம் 3 லட்சத்து 43ஆயிரம் வசூல் பணம் உள்ளதாக கூறியுள்ளார். அப்போது அதனை கொடு சோதனையிட வேண்டும் என கூறி பையை வாங்கிவிட்டு மீண்டும் முருகனிடம் பையை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சிறிதுதூரம் சென்ற முருகன் பையில் உள்ள பணத்தை எடுத்துபார்த்தபோது பையில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனது தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து முருகன் திலகர்திடல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மதுரை மாநகர் திடீர்நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற நாடக நடிகர் தன்னை போலீஸ் என கூறி, டிப் டாப்பாக வந்து முருகனை அடித்து மிரட்டி தான் சோதனை செய்வது போல நடித்து தான் அணிந்திருந்த வேஷ்டிக்குள் பணகட்டுகளை போட்டு திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஹரிகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த காவல்துறையினர், போலீஸ் என கூறி 1.5 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட நாடக நடிகர் ஹரிகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட நாடக நடிகர் ஹரிகிருஷ்ணன் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக GST அதிகாரி என கூறி மோசடியில் ஈடுபட்டு கைதானவர் என்பது குறிப்பிடதக்கது.
0
0