ரயிலில் 30 கிலோ போதைப்பொருள் கடத்தல்.. மதுரையில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள் ; தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கும் சம்பவம்!!

Author: Babu Lakshmanan
1 March 2024, 1:32 pm

மதுரை ரயிலில் பல கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் மதுரை வந்தடைந்தது. அதில் பயணித்த ஒருவர் போதைப்பொருள் கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் நுண்ணறிவும் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் மதுரையில் அந்த நபரை சுற்றி வளைத்தனர். அவரிடம் சோதனை செய்தனர்.

அவரிடம் பலகோடி மதிப்புள்ள 30கிலோ மெத்தபைட்டமின் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்த போது, அவர் சென்னையை சேர்ந்த சிலமன் பிரகாஷ் (42) என்று தெரிய வந்தது.

பிடிபட்ட போதைப் பொருளுடன் ரகசிய இடத்திற்கு அவரை கொண்டு சென்று அவரிடம் விசாரித்து வருகின்றனர். அவர் சென்னையில் எந்த பகுதியை சேர்ந்தவர். அவர் கொண்டு வந்த போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது.

எங்கு கொண்டு சென்றார். இவருக்கு பின்னால் யார் உள்ளனர் என்பது குறித்து அதிகாரிகள் பிடிபட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்தனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 289

    0

    0