மதுரையில் தன்னிடம் குடிபோதையில் தவறாக நடந்த நபரை துணிச்சலுடன் தட்டிகேட்ட பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மதுரை பெரியார் பேருந்து நிலையம், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். நேற்று மாலையில் பணி முடிந்துவிட்டு வீட்டிற்கு செல்ல இருந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் குடிபோதையில் இருந்த நபர் தவறாக நடந்து கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பெண் அந்த நபரை பெரியார் பேருந்து நிலையத்தின் நடைமேடைகளில் துரத்தி சென்று அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர் களிமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து பெரியார் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த திடீர் நகர் போலீசார், அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தவறு செய்த நபரை துணிச்சலுடன் தட்டிக் கேட்டு பெண்ணின் செயலை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் எந்தத் தவறுமில்லை என 2013 ஆசிரியர் தகுதித்…
This website uses cookies.