மதுரை – துபாய் விமானம் ரத்து : SPICE JET விமானம் அறிவிப்பு… கடுப்பான பயணிகள் வாக்குவாதம்!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2024, 2:43 pm

மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் தினமும் விமான சேவை வழங்கி வருகிறது. வங்கக் கடலில் வடக்கு மற்றும் அதனையொட்டி உள்ள கிழக்கு மத்திய கடற்கரையில் புயல் கடப்பதால் மேலும் ரீமல் புயல் தீவிரமாக வலுப்பெற்று உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மதுரையில் இருந்து 12.00 மணிக்கு துபாய் செல்வதற்காக 70 பயணிகளுடன் புறப்பட வேண்டிய ஸ்பைசெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்பைசெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் முன்னேறிவு எதுவும் இன்றி பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தவுடன் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.. மீண்டும் பாஜக ஆட்சிதான் : ஜிகே வாசன் நம்பிக்கை!

ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் வாக்குவாதத்தினால் பயணிகளின் பயண திட்டத்தை நாளை அல்லது நாளை மறுநாள் மாற்றம் செய்து தருவதாக அறிவித்துள்ளனர்.

  • Vaadivaasal Tamil movie வாடிவாசலை விட்டு வெளியேறிய சூர்யா..வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்…!
  • Views: - 282

    0

    0