மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின் உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள காடுபட்டி பகுதியை சேர்ந்த விவசாயி முத்துகணேஷ் என்பவர் மின்இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய விக்கிரமங்கலம் உபமின்நிலையத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில், பெயர் மாற்றம் செய்ய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வரும் சோழவந்தானை சேர்ந்த குணசேகரன் என்பவர் முத்து கணேஷிடம் ரூ.2500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயி முத்துகணேஷ் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டினை முத்து கணேஷிடம் வழங்கி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.சத்தியசீலன் தலைமையிலான போலீசார் மின்வாரிய அலுவலகத்தில் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்பொழுது. லஞ்ச பணம் பெற்ற உதவி செயற்பொறியாளர் குணசேகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.