மதுரை ; நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் அரசு ஊக்கத்தொகை வழங்காதை கண்டித்து, மதுரையில் அரசு மருத்துவர்கள் நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது ;- மதுரையில் அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே போராட்டம் நடத்திய போது, முதல்வர் ஸ்டாலின் சம்பள உயர்வுக்கான அரசாணை வெளியிட்டார். ஆனால் 30 மாதங்கள் ஆகியும் இதை நடைமுறைபடுத்தவில்லை.
உயர்நீதிமன்றத்தில், சுகாதாரதுறை செயலாளர் இந்த அரசாணையை நிறுத்தவில்லை என அபிடவிட் தாக்கல் செய்துள்ளதால், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஆகஸ்ட் முதல் ஊக்கத்தொகை சேர்த்து வழங்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டும் செயல்படுத்தவில்லை. இந்த மாத சம்பளத்திலும் ஊக்கத்தொகை அலவன்ஸ் சேர்க்கப்படவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மதுரையிலே அரசு மருத்துவமனையில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
25,000 டாக்டர்களில் 15,000 பேருக்கு ஒரு லட்சம் வரையும், 4000 பேருக்கு 5 லட்சம் வரையும் நிலுவை உள்ளது என அவர்கள் குற்றச்சாட்டை கூறுகிறார்கள். ஒவ்வொரு டாக்டருக்கும் 3,000 முதல் 25,000 வரை சம்பளம் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள். கிராமத்தில் பணிபுரியாமல் இ.எஸ்.ஐ. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு இந்த பணப்பயன் கிடைக்காது. ஒரு சிலரின் எதிர்ப்பை பயன்படுத்தி அரசு அதிகாரிகள் எங்களை ஏமாற்றுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்கள்.
எனவே எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளில் வெளி, உள் நோயாளிகள் பாதிக்காதவாறு சுழற்சி முறையிலே தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்க இருக்கிறோம் என அரசு டாக்டர்கள் கூறுகிறார்கள். இந்த முறை நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று கடுமையாக உறுதியாக சொல்லுகிறார்கள்.
இந்திய மருத்துவ கழக மதுரை கிளை தலைவரும், டாக்டரின் தொடர் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் அரசாணையை உடனே செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஊதிய உயர்வு வழங்காதை கண்டித்து அரசு டாக்டர் சங்கம் சார்பில் மதுரை அரசு மருத்துவமனையிலே தொடர் உள்ளிரப்பு போராட்டம் நடத்துவது மிக வருந்தத்தக்கது.
பணியில் இருக்கும் அரசு மருத்துவர்கள் போராட்டங்கள் நடத்தும் போது மக்களுக்கு ஏற்படும் துயரங்களை இந்த அரசு அறியுமா? ஆகவே, இந்தப் போராட்டத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், அதனைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை நாங்கள் மேற்கொள்வோம், என கூறினார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.