மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாயம்… வெளியான சிசிடிவி காட்சி… காவல்துறை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
12 July 2023, 1:20 pm

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாயமான நிலையில், மூன்று நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேனி மாவட்டம் பூதிபுரம், சுப்பிரமணி கோவில் தெருவில் சேர்ந்த ராம்ராஜ். இவர் கடந்த 16ம் தேதி தலையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையின் போது ராம்ராஜுக்கு தலையில் கேன்சர் கட்டி என்பதும், அதனை அப்புறப்படுத்திய பின்னர் மனநல பாதிக்கப்பட்டவர் போன்று இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிகிச்சையில் இருந்தபோது, கடந்த 9ஆம் தேதி அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த ராம்ராஜ், திடீரென காணாமல் போனதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மூன்று நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லையென குற்றசாட்டுகின்றனர்.

இதுகுறித்து ஒன்பதாம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு வாசலில் காவலாளி இல்லாத போது, நோயாளி ராமராஜ் வெளியே சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!