வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3 விண்கலம்… நேரலையில் கண்டுகளித்த மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள்!!
Author: Babu Lakshmanan14 July 2023, 2:45 pm
சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவுவதை மதுரை சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி குழந்தைகள் பள்ளியின் ஸ்மார்ட் போர்டு (SMART BOARD) வழியாக நேரலையில் (live telecast) கண்டுகளித்துவருகின்றனர்.
சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்த உள்ளது. இந்நிகழ்வை சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பார்க்க அப்பள்ளியின் வானவில் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு பார்வையிட்டுவருகின்றனர்.
முன்னதாக இஸ்ரோவின் சாதனைகள், நிகழ்வுகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் விண்ணில் ஏவப்படும் சந்திரயான் 3 விண்கலத்தை, பள்ளியின் ஸ்மார்ட் போர்டு (SMART BOARD) வழியாக நேரடியாக (live telecast) மாணவ- மாணவியர்கள் காண பள்ளி நிர்வாகமும், மாநகராட்சியும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களோடு இணைந்து இந்நிகழ்ச்சிகளை கண்டுகளித்து வருகின்றனர்.