விடாது பெய்த கனமழை… நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை… உடல்நசுங்கி ஒருவர் பலி!

Author: Babu Lakshmanan
17 May 2024, 10:12 am

மதுரையில் பெய்த கனமழையால் வீட்டின் மேல் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மதுரை அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

இந்த நிலையில், மதுரை வைகையாற்றை ஒட்டியுள்ள மதிச்சியம் சப்பாணி கோவில் தெரு பகுதியில் உள்ள பாலசுப்ரமணியன் (44) என்பவர் நேற்றிரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென மழை காரணமாக வீட்டின் மேலே இருந்த கான்கிரிட் சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

மேலும் படிக்க: ‘நாங்க யாரு தெரியுமா..? எங்ககிட்டயே டிக்கெட்டா..?’… கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது!!

இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மீது சுவர் விழுந்தது சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். வீடு இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் வீட்டில் உள்ளவர்கள் மதிச்சியம் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு அந்த காவல்துறையினர் பாலசுப்ரமணியனின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

பாலசுப்பிரமணியம் தனது குடும்பத்தினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வரும் நிலையில் நேற்று சுவர் இடிந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மதிச்சியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 326

    0

    1