ஆரம்பிக்கலாங்களா..? ரெடியானது பாலமேடு ஜல்லிக்கட்டு அழைப்பிதழ்… மரண வெயிட்டிங்கில் காளையர்கள்…!!

Author: Babu Lakshmanan
1 January 2024, 5:37 pm

மதுரை ; பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக, தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை நெருங்க உள்ள நிலையில், மதுரையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடு முழு தீவிரமாக நடந்து வருகிறது.

பாலமேட்டில் வருகிற 16-ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழை ஜல்லிக்கட்டின் ஏற்பாட்டாளர் குழு வெளியிட்டுள்ளது.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே, போட்டிக்கான ஏற்பாடுகள் நாளை முதல் தொடங்கும் என்றும் விழா குழு தெரிவித்துள்ளது.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!