கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மீண்டும் புகுந்த மழைநீர் ; இரு பிரிவுகள் தற்காலிக மூடல்!!!

Author: Babu Lakshmanan
21 May 2024, 11:30 am

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கீழ் தளத்தில் உள்ள பார்வையற்றோர் பிரிவு மற்றும் கலைக்கூடத்தில் மழைநீர் உட்புகுந்ததால் தரைத்தளத்தில் உள்ள இரண்டு நூலக பிரிவுகள், பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் நத்தம் சாலையில் ரூ.215 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு தளவாடப் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகள் மற்றும் கட்டுமானத்துக்காக ரூ.130 கோடியும் செலவிடப்பட்டது.

மேலும் படிக்க: உண்மையை சொன்னால் ஏத்துக்க மாட்டாங்க… திமுக அரசின் 3 ஆண்டுகால ஆட்சிக்கு இதுவே சாட்சி ; ஆதாரத்தை காட்டிய ஆர்பி உதயகுமார்!!!

2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டதாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

நவீன கட்டுமான அம்சங்களுடன் குழந்தைகள், வாசகர்கள், பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் போட்டித்தேர்வாளர்கள் அனைவரையும் கவரக்கூடிய வகையில் நவீன அறிவியல் தொழில்நுட்ப அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மதுரையில் பெய்து வரும் கோடைமழையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தண்ணீர் புகுந்துள்ளது.

கீழ் தளத்தில் உள்ள கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு (பார்வையற்றோர் பிரிவ) ஆகியவற்றில் மழைநீர் புகுந்தது. கட்டிடத்திற்கு வெளிப்புறமாக செல்லக்கூடிய மழைநீர் குழாய் உடைந்து அந்த தண்ணீர் இந்த அறைகளில் எப்படியோக புகுந்ததாக கூறப்படுகிறது. அதனால், இந்த பிரிவுகளை தற்காலிகமாக பொதுமக்கள், வாசகர்கள் பார்வையிடுவதற்கும், பயன்படுத்துவதற்கும் நிறுத்தப்பட்டு மூடிவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இணைந்து முழுமையாக ஆய்வு செய்து மழைக்காலத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து மதுரை பொதுப்பணித் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்கும் பொழுது, வெளிப்புறமாக செல்லக்கூடிய மழைநீர் குழாயில் புறா கூடுகள் சென்று அடைந்துள்ளது. அந்த அடைப்பால், இரு கீழ் தள அறைகளில் தண்ணீர் புகுந்தது. தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டு மீண்டும் அதுபோல், மழைநீர் புகாதவாறு பராமரிப்பு பணிகள் நடக்கிறது என்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu