கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க பாரம்பரிய முறையை கடைபிடியுங்கள் : அழகர்கோவில் துணை ஆணையர் அனிதா வேண்டுகோள்

Author: Babu Lakshmanan
2 April 2022, 5:21 pm

மதுரை சித்திரைவிழாவின் போது கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க நவீன இயந்திரங்களை பயன்படுத்த வேண்டாம் என்று அழகர்கோவில் துணை ஆணையர் அனிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா, ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் சிகர நிகழ்வாக மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிப்பதற்காக வருகை தரும் கள்ளழகர், வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு ஏப்ரல்-16ஆம் தேதி அதிகாலை காலை 5.50 மணிக்கு மேல் 6.20க்குள் நடைபெறவுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவில் துணை ஆணையர் அனிதா பேசியதாவது :- திருவிழா 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி திருமஞ்சனத்தோடு திருவிழா நிறைவு பெறுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரானா பெருந்தொற்று நடைபெறுவதால் மக்கள் ஆர்வத்தோடு உள்ளனர். வரும் 14 ஆம் தேதி மாலை புறப்பாடாகி ஒவ்வொரு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளார்.

கள்ளழகர் புறப்பாட்டின் போது 456 மண்டகப்படிகள் உள்ளன. 7-8 மண்டகப்படிகள் புதிதாக கேட்கப்பட்டுள்ளன. அது பரீசீலனை செய்யப்படும். கள்ளழகர் புறப்பாடு எதிர்சேவையின் போது GPS முறையில் புதிய லிங்க் ஒன்று தொடங்கப்பட்டு, அழகர் எங்கு உள்ளார், எந்த மண்டகப்படியில் உள்ளார் என்பதை தெரிந்துகொள்ளலாம் .

இதேபோன்று மதுரை காவலன் என்ற மொபைல் ஆப் வழியாகவும், கோவில் இணையதளம் மற்றும் தனி லிங்க் மூலமாகவும் அறிந்துகொள்ள ஏற்பாடு உள்ளது. கள்ளழகர் வருகை தரும் மண்டகப்படிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மண்டகப்படி பின்புறம் சேதமடைந்துள்ளதால் அங்கு மக்கள் கூடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கள்ளழகர் புறப்பாடு மற்றும் எதிர்சேவையின் போது பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தும் வகையில் சாமிக்கு தண்ணீர் பீய்ச்சுவதை, பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோல் மூலமாக தயாரிக்கப்படும் பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும். நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதால் அழுத்தம் அதிகமாகி சாமி சிலை சேதாரம் அடைவதால் பக்தர்கள் அதனை தவிர்க்க வேண்டும். மேலும் நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து காவல்துறை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், என்றார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ