பிறந்தது மார்கழி… மதுரையில் பெண்கள் இழுக்கும் அஷ்டமி சப்பர வீதி உலா ; பக்தர்களுக்கு படியளக்கும் மீனாட்சி அம்மன்… !!

Author: Babu Lakshmanan
16 December 2022, 10:53 am

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர வீதி உலாவின் போது, பக்தர்களுக்கு சுவாமி படியளக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்பக்தர்கள்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலை முத்தாய்ப்பானது. இந்த விழா தினத்தன்று சுந்தரேசுவரர்-பிரயாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், சப்பரங்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை அடைவர். 

இதில் மீனாட்சிஅம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். பக்தர்கள், கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ