உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர வீதி உலாவின் போது, பக்தர்களுக்கு சுவாமி படியளக்கும் நிகழ்வு நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்பக்தர்கள்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றது.
இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலை முத்தாய்ப்பானது. இந்த விழா தினத்தன்று சுந்தரேசுவரர்-பிரயாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், சப்பரங்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை அடைவர்.
இதில் மீனாட்சிஅம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். பக்தர்கள், கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.