மதுரை மீனாட்சியம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா : தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan28 மார்ச் 2023, 2:32 மணி
மதுரை மீனாட்சியம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா – ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
மே-2 ஆம் தேதி மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், 05ஆம் தேதி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நடைபெறும்.
உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசிதிபெற்றதாகும்.
15நாட்கள் திருவிழாவான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள்
இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் பக்தர்கள் அனுமதியுடன் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேதிகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 30ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், மே – 2ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 3ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது எனவும் இதேபோன்று கள்ளழகர் கோவிலை பொறுத்தமட்டில் மே 4ஆம் தேதி இரவு கள்ளழகர் எதிர்சேவையும், மே 5 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறவுள்ளதாகவும் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது . முன்னதாக கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவிற்கான ஆயிரம்பொன் சப்பரத்திற்கான சப்பர மூகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடதக்கது.
0
0