ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் மெகா கறி விருந்து : ஆச்சர்யப்பட வைக்கும் கிராம மக்களின் நம்பிக்கை..!!

Author: Babu Lakshmanan
7 January 2023, 8:22 pm

மதுரை : முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட மெகா கறி விருந்தில் 20 கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

மதுரை திருமங்கலம் தொகுதியில் கரடிக்கள் கிராமத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கரிவிருந்து திருவிழா நடைபெற்றது. இந்த கறி விருந்து திருவிழாவில் சுமார் 65 கிடாவெட்டி சுமார் 10,000 ஆண்கள் மற்றும் கலந்து கொண்ட கறி விருந்து அதிகாலையில் இன்று நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கரடிக்கல் கிராமத்தில் பாறை கருப்புசாமி கோவிலில் மார்கழி மாதம் ஒவ்வொறுஆண்டும் மார்கழி மாதம் கிடா வெட்டி சாமி கும்பிடுவது வழக்கம். இதை இரவு நேரத்தில் கிடாவெட்டி அதிகாலையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆண்கள் மட்டும் இந்த கறி விருந்தில் கலந்து கொள்கின்றனர்.

இங்கு சாப்பிடும் ஆண்கள் இலையை எடுப்பதில்லை. இந்த இலை தானாகவே காற்றில் பறந்து மறைந்துவிடும் என்பது ஊர் மக்களின் நம்பிக்கை. அதுவரை இந்த பகுதியில் எந்த பெண்களும் வர மாட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.

இந்த கோயிலின் சிறப்பு பல நூறு ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ளும் ஆண்களுக்கு கறி விருந்தில் வேண்டுதல், வெகு விரைவில் நிறைவேறும் என்று என்பது ஆண்களின் விருப்பமாகும்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!