மேலூரில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்… பல வகையான நாட்டு மீன்களை பிடித்து படையலிட்டு அசத்தல்..!!
Author: Babu Lakshmanan9 March 2022, 2:43 pm
மதுரை : மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு வகையான நாட்டு மீன்களை பிடித்து அசத்தியுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டியிலுள்ள கம்புளியான் கண்மாயி அமைந்துள்ளது. இந்த கண்மாயில் வருடந்தோறும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு மீன்பிடி திருவிழாவில் சருகுவலையபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுகளான வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இன்று அதிகாலையில் கண்மாயில் வந்து குவிந்தனர்.
அதனை அடுத்து கிராமத்தின் சார்பில் துண்டு வீசப்பட்டு பிறகு அனைவரும் கண்மாயில் ஒன்றாக இறங்கி தங்கள் கையில் வைத்துள்ள மீன் கூடைகள், வலைகள், கச்சா, உள்ளிட்டவைகளை கொண்டு பல்வேறு வகையான மீன்களை பிடித்து அசத்தினர். மேலும், பிடிபட்ட மீன்களான கெலுத்தி, கெண்டை, கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்து அசத்தினர்.
மேலும் பிடிபட்ட மீன்களை முதலில் இறைவனுக்கு படைத்து பிறகு தாங்கள் சாப்பிடுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதில் சமூக ஆர்வலர் பூமிநாதன், பிரபு சிவகுமார் கருப்புசாமி ராஜ பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் மீன்களை பிடித்து அசத்தினர்.