கஞ்சா வழக்கில் சிக்கிய சவுக்கு சங்கர்.. ஜாமின் கோரிய மனு; ஜூன் 15-ம் தேதி வெளியாகும் தீர்ப்பு..!

Author: Vignesh
13 June 2024, 3:12 pm

கஞ்சா வழக்கு – சவுக்கு சங்கர் ஜாமின் கோரிய மனு தீர்ப்புக்காக வரும்-15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறையில் சவுக்கு சங்கருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுமைகள் நடைபெறுவதை கண்டித்து 2 நாட்கள் சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

பிரபல யூடியுபர் சவுக்குசங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது தனது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக PC பட்டி காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜூன் -19 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலை நீடித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்..

savukku shankar

இந்நிலையில் இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவானது இன்று மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் தீர்ப்புக்காக வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து யூடியுபர் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது: சிறையில் சவுக்கு சங்கருக்கு நடைபெறும் கொடுமைகளை கண்டித்து புழல் சிறையில் உள்ள youtuber சவுக்கு சங்கர் 2 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்தார்.

இதனையடுத்து, 2 நாள் உண்ணாவிரதத்தை காவல்துறையினர் கட்டாயப்படுத்தி முடிக்க வைத்துள்ளனர் எனவும், கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கரை சிறை விதிகளை மீறி 24 மணி் நேரமும் சிறையில் தனியாக காவலரை வைத்து கண்காணித்துவருகின்றனர். சவுக்கு சங்கரின் கையில் இருந்த காயத்திற்கான சிகிச்சை குறித்து புழல்சிறை நிர்வாகத்திடம் கேட்டால் மருத்துவ சான்று இல்லை என கூறி மருத்துவம் அளிக்கவில்லை என்றார்.

savukku shankar

சவுக்கு சங்கரின் மீதான வழக்கை சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்காக நடத்திவருகிறோம் ஆனால் சிறையில் தொடர்ந்து கொடுமைகள் நடைபெறுகிறது எனவும், சிறையில் சவுக்கு சங்கருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுமைகள் நடைபெறுகிறது என்றார். ஜாமின் கோரிய வழக்கு 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர் என்றார்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 249

    0

    0